பட ப்ரோமோஷனில் தமிழில் பேசி அசத்திய அல்லு அர்ஜுன்..!  

 

தெலுங்கில் பிரபலமான நடிகர் தான் அல்லு அர்ஜுன். இவர் சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் தனது திறமையால் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் அசத்தியிருப்பார். இவர் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இந்த படம் பான் இந்தியா அளவில் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. முக்கியமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக காணப்பட்டது. இந்த படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் தென் இந்திய அளவிலேயே அடையாளம் படுத்தப்பட்டார்.

புஷ்பா திரைப்படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பல கருத்துக்களை பெற்றது. மேலும் இந்த படம் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதிலும் தெலுங்கு திரை உலகில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியது அல்லு அர்ஜுன் தான்.

இந்த நிலையில், புஷ்பா படத்தின் பட ப்ரமோஷன் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஷீலா நடனமும் ஆடி இருந்தார். குறித்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன் நான் ஒரு பக்கா சென்னை பையன் நான் நேஷனல் இன்டர்நேஷனல் என எங்கு சென்றாலும் சென்னை தான். சென்னை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். நான் ஒரு பக்காவான சென்னை பையன். எனது நண்பர்களுடன் லோக்கல் சென்னை பாசையெல்லாம் பேசியுள்ளேன்.

ரசிகர்கள் அவரிடம் தெலுங்கில் பேசுமாறு கோரிக்கை வைத்த போதும் நான் தமிழில் தான் பேசுவேன். அது இந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை என தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தமிழ் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.