அமலா ஷாஜி குறித்து மேடையில் பேசிய அறிமுக ஹீரோ...! வெறும் 30 செகண்டுக்கு 2 லட்சமா?

 

விஜய் ஆண்டனி இசையில் மக்காயல, மஸ்காரா போட்டு மயக்குறியே, வேலாயுதம் இன்ட்ரோ பாடல் என பல ஹிட் பாடல்களை எழுதிய பிரியன் அரணம் படத்தை எழுதி, இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார்.

அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேடையில் பிரியன் பேசும் போது தன்னுடைய படத்தின் மேடை என ரொம்பவே வெளிப்படையாக இந்த மேட்டைரை பேசியுள்ளார்.

2 நிமிஷ பாடலுக்கு நடனமாட சென்னையில் ஒரு பொண்ணு 50 ஆயிரம் கேட்குது என்றும் வெறும் 30 செகண்ட் நடனமாட கேரளா பொண்ணு 2 லட்சம் மற்றும் ஃபிளைட் டிக்கெட் எல்லாம் கேட்குது என பிரியன் பேசியுள்ளார். மேலும், நானே, ஃபிளைட்ல போனது இல்லையேம்மா என அவர் பேசும் போது, அந்த பெண்ணின் பெயரை சொல்லச் சொல்லி திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி சொல்ல, வேற யாரு நம்ம அமலா ஷாஜி தான் என பிரியன் பேசியுள்ளார்.