பிக்பாஸில் கிடைத்த பணத்தில் அமுதவாணன் வாங்கிய பொருள் இதுதான்..!!

தொலைக்காட்சி பிரபலம் அமுதவாணன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆடம்பரமான கார் மாடலை சொந்தமாக வாங்கியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
 
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் அமுதவாணன். மிம்கிரி கலைஞராகவும், நகைச்சுவை நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். குறிப்பாக நடிகர் ராமராஜன் போன்று நடித்து, அவரிடமே பாராட்டுக்களை வாங்கியுள்ளார்.

நடனம், நகைச்சுவை, மோனோ ஆக்டிங் என பன்முகத்தன்மை கொண்ட அமுதவாணன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலும் சிறப்புக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இதன்மூலம் அவருக்கு கடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமுதவாணன், நிகழ்ச்சிக்கு முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதுவும் ரூ. 11.75 லட்சம் பணத்துடன். 

நிகழ்ச்சியில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு இருந்தும், எதற்காக அமுதவாணன் ரூ. 11 லட்சம் பணத்துடன் வெளியே வந்தார் என்று பலரும் விமர்சனம் செய்தனர். அதை தொடர்ந்து அவர் வெளியே வரவில்லை. வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேறவில்லை.

இந்நிலையில் அவர் மாருதி சுஸுகியின் புதிய மாடல் காரை சொந்தமாக வாங்கியுள்ளார். குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று மாருதி சுஸுகி ஃபிரானாஸ் காரை வாங்கியுள்ளார். இதனுடைய எக்ஸ் ஷோரூம் விலை மட்டும் ரூ. 8 லட்சமாகும். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.