விரைவில் சீரியலில் எண்ட்ரியாகும் அனிதா சம்பத்..? அதுவும் விஜய் டிவி சீரியலில்... அவரே கூறிய தகவல்..!
விஜய் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் டிஆர்பி ரேட்டிலும் முதல் 10 இடத்திற்குள் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.
அதேபோல் ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்த ’சிறகடிக்க ஆசை’ சீரியல் மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் முதல் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.
மேலும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தங்கமயில் என்ட்ரிக்கு பின் சீரியல் விறுவிறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் இந்த மூன்று சீரியலில் ஒன்றில் என்ட்ரி ஆக இருப்பதாக அறிவித்துள்ளார். எந்த சீரியல் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளதை அடுத்து ரசிகர்கள் தற்போது எந்த சீரியலாக இருக்கும் என்று குழப்பத்தில் உள்ளனர்.
இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மூன்று சீரியல்களில் ஒன்றில் அனிதா சம்பத் என்ட்ரி ஆகப் போகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.