அனுபமா பரமேஸ்வரன் அம்மாவா இது..? பார்த்தா அப்படி தெரியலையே..!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனது அம்மாவின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளதை அடுத்து, அனுபமாவை விட அவருடைய அம்மா வைரலாகி வருகிறார்.
 

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

எனினும் அனுபமா பெரிதும் தெலுங்கு சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஜெயம் ரவி, கீர்த்து சுரேஷ் இணைந்து நடிக்கும் சைரன் என்கிற தமிழ் படத்திலும் மற்றும் ஜே.எஸ்.கே என்கிற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ஃபோலோயர்ஸுகள் உள்ளனர். சமீபத்தில் அனுபமா தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி, அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதையடுத்து ரசிகர்கள் பலரும் அனுபமாவின் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினர்.

அப்போது பல ரசிகர்கள், இருவரையும் பார்க்கும்போது அம்மா - மகள் போலவே இல்லை, அக்கா - தங்கை போலிருக்கிறது என்று கமெண்டு செய்து வருகின்றனர். அதை உண்மை தான் என்பது போல, அனுபமா மற்றும் அவருடைய அம்மாவை பார்க்கும் போது நமக்கும் தெரிகிறது.