விரைவில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா: நடிகர் விஷால் தகவல்..!!

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக முன்னர் விஜயகாந்த் இருந்து வந்தார். பின்னர் இவரைத் தொடர்ந்து சரத்குமார் பல ஆண்டுகளாக தலைவராக இருந்து வந்தார். இவரையடுத்து 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் சங்கத்திற்கான இடத்தில் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி களமிறங்கிய நாசர் தலைமையிலான விஷால் அணி வெற்றி பெற்றது. 

இவர்களின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, கமல் செங்கல் எடுத்து கொடுக்க கோலகலமாக நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கியது. 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால், 

தற்போது புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் நடிகர் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை மீட்ட அவரோட உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடிகர் சங்க கட்டிடத்திற்குள் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.