ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீஸ்..!!

மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போது, அரங்கிற்குள் வந்து பாதுகாப்பு படையினர் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
 

திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு இணையாக, இசை கச்சேரிகளையும் ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மாராட்டிய மாநிலம் புனேவில் அமைந்திருக்கும் ராஜ் பகதூர் மில் வளாகத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரி நடந்தது. இதற்கு அம்மாநில மக்கள் திரளாக வந்து கூடியிருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மானும் நிகழ்வில் தோன்றி பாடல்களை பாடி வந்தார். அப்போது நிகழ்ச்சி அரங்கிற்குள் புகுந்த பாதுபாப்புப் படை அதிகாரி ஒருவர், திடீரென மேடையேறிவிட்டார். அப்போது ஏ.ஆர். ரஹ்மான் ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று இரவு 10 மணியாகிவிட்டது நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

உடனடியாக தனது கைக் கடிகாரத்தை பார்த்த ரஹ்மான், பத்து மணியாகிவிட்டது நிகழ்ச்சியை முடித்துகொள்வதாக மைக்கில் அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சி அரங்கை விட்டு வெளியேறினர். இதுதொடர்பாக காவல்துறையிடம் பேசும் போது, இரவு 10 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அந்த நேரம் கடந்துவிட்டதால், கச்சேரியை நிறுத்துமாறு ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்டோம். அவரும் ஒப்புக்கொண்டார். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறினர்.