நல்வாய்ப்பாக தப்பித்த ஏ.ஆர். ரஹ்மான்- அதற்கும் பெருமை பேசிய ஆர். பார்த்திபன்..!!
 

இரவின் நிழல் படத்தை தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க மறுத்துவிட்டதாக ஆர். பார்த்திபன் தனது ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் மாறுபட்ட சினிமாவை எப்போதும் எக்ஸ்பிளோர் செய்யும் இயக்குநர்களில் முதன்மையானவர் ஆர். பார்த்திபன். தேர்ந்த நடிகராக இருந்தபோதிலும், படங்களை இயக்குவதற்கு அவர் தயக்கம் காட்டுவது கிடையாது. 

கடந்த 2014-ம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான ‘கதை, திரைக்கதை, வசனம்’ என்கிற படம் சிறந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து மாறுபட்ட படங்களை இயக்குவதில் அவர் ஆர்வங்காட்டத் தொடங்கினார்.

அந்த வரிசையில் அடுத்து வந்த படம் ‘ஒத்த செருப்பு’. பார்த்திபன் மட்டுமே நடித்திருந்த இந்த படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை. ஆனால் அது ஓ.டி.டி தளத்தில் ரிலீஸானதும் அதற்கான வரவேற்பு அதிகரித்தது. மத்திய அரசின் திரைப்பட விருதும் வழங்கப்பட்டது.

தற்போது இந்த படத்தை இந்தியில் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளார். அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ள இந்த படத்தின் பணிகள் சற்று தாமதமாக துவங்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அதன்படி ஆர். பார்த்திபன் இயக்கும் புதிய படத்துக்கு டீன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் 13 முதல் 15 வயது உடைய சிறுவர்களின் கதை அம்சம் கொண்ட படமாக இது தயாராகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஆனால் வேலைப்பளூ காரணமாக ஆர். பார்த்திபன் படத்தை ரஹ்மான் ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆர். பார்த்திபன், 

என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.