கேட்டரிங் துறையை தேர்வு செய்துள்ள ஏஆர் ரகுமானின் மகள் ரஹீமா..!

 

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்கள், இசைஞானி இளையராஜா உட்பட இசையமைப்பாளர்கள், பாரதிராஜா, பாக்யராஜ் உள்பட பல இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பல திரையுலக பிரபலங்களின் வாரிசுகள் திரையுலகில் உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானின் மகன் ஏஆர் அமீன் ஒரு பாடகராகவும் அவரது மகள் கதீஜா இசையமைப்பாளராகவும் இருக்கும் நிலையில் இரண்டாவது மகள் ரஹீமா மட்டும் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கேட்டரிங் துறையை தேர்வு செய்துள்ளார்.

அவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து நிலையில் தற்போது அவர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் படித்த கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் தனது மகள் பட்டம் வாங்குவதை நேரில் கண்டு ரசித்ததோடு அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏ ஆர் ரஹ்மானின் மகள் ஒரு மிகச்சிறந்த கேட்டரிங் வல்லுநராக எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.