விஜய் டிவியை விட்டு வெளியேறினாரா அறந்தாங்கி நிஷா..?

 

விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா சமீபத்தில் வெளியேறிவிட்டார் என ஒரு  தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு என்ன நடந்தது என்று மீண்டும் குடைய ஆரம்பித்துள்ளனர். 

இது பற்றி அறந்தாங்கி நிஷா விளக்கம் கொடுத்து பதிவிட்டு இருக்கிறார. இது உண்மை அல்ல வதந்தி என தெரிவித்துள்ளார். "யாரு பார்த்த வேலை சாமி இது, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க" என அவர் கூறி இருக்கிறார்.  இதனால் இது உண்மையான தகவல் இல்லை என்பதை நிஷா உறுதி செய்துள்ளார்.