கோட் படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி..!!
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது வேற லெவலில் சிறப்பாக தரமாக உருவாகி வரும் திரைப்படமே THE GOAT .
AGS நிறுவனம் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் பல நாடுகளில் விறுவிறுவிப்பாக உருவாகி வரும் இப்படத்தை மாநாடு , மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கும் நேரத்தில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா கூறியதாவது :
‘ஒரு அற்புதமான ட்ரைலரை நாங்கள் தயார் செய்து வருகிறோம். அதனால் அமைதியாக இருந்து, எங்களுக்கு இரண்டு நாட்கள் கொடுங்கள்.’
‘இது பற்றி proper அப்டேட் நாளைக்கு (அதாவது இன்று) வரும் ‘ என அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார்.