இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா..? டாக்டருக்கு நெப்போலியன் கொடுத்த சரியான பதிலடி..!

 
கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனுஷின் திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் தான் தனுஷ். இதன் காரணத்தினால் தனது சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்தையும் துறந்து விட்டு தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் சேர்ந்து செட்டில் ஆனார் நடிகர் நெப்போலியன்.

இதைத் தொடர்ந்து அங்கு தனுஷுக்கு சிகிச்சை வழங்கியதோடு மட்டுமில்லாமல் அமெரிக்காவில் பெரிய ஐடி கம்பெனியும் ஆரம்பித்தார். மேலும் விவசாயத்தை ஊக்குவிக்கும் பல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை ஒதுக்கி வைக்காமல் அவரை படிப்பிலும் திடப்படுத்தி இருந்தார் நெப்போலியன்.

தற்போது தனுசுக்கு திருமண வயது எட்டியதும் திருநெல்வேலியில் பெண் எடுத்து உலகமே வியக்கும் அளவுக்கு ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்தன. தனுஷ் இல்லற வாழ்க்கையில் ஈடுபட  முடியாது, நெப்போலியன் அந்தப் பெண்ணின் வாழ்க்கை கெடுத்துவிட்டார் என்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது மகன் தனுஷ் பற்றி மோசமான கருத்துக்களை கூறிய டாக்டர் தொடர்பில் நெப்போலியன் பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், என்னுடைய மகனின் திருமணம் பற்றி ஒரு டாக்டர் மிகவும் கொச்சையாக பேசி வருகின்றார். அதை கேட்கும் போது மனம் ரொம்ப கஷ்டமா இருக்கு. பொதுவா நான் செய்யும் உதவிகளை வெளியில சொல்ல மாட்டேன். அது எனது மனைவிக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் இப்போது அந்த விஷயத்தை சொல்ல வேண்டிய நிலைமை உள்ளது.

பாபு என்ற ஒரு நடிகர் இருந்தார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து தவறான சிகிச்சையால் அவருடைய உடல் மோசமான நிலைக்கு சென்றது. அதன்பின்பு அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார். அவருக்கு உதவுமாறு பொன்வண்ணன் என்னிடம் கேட்டார். நானும் நான்கு ஆண்டுகள் வரை மாதா மாதம் அவருக்கு பணம் அனுப்பி உதவி செய்தேன்.

அந்த நடிகர் யாரு என்றால் எனது மகனைப் பற்றி தப்பாக பேசிய டாக்டரின் நெருங்கிய உறவினர். தனது உறவினர் இப்படி மோசமான சூழ்நிலையில் இருக்க அவர் நலனில் அக்கறை கொள்ளாத நீங்கள், அவரைப் பற்றி கவலைப்படாத நீங்கள், இன்று என்னுடைய மகனைப் பற்றி கவலை படுகின்றீர்களா? இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் என நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

எனது மகனை பற்றி பேசிய மருத்துவர் வேற யாரும் இல்லை தனுஷ் குழந்தை பெறவே தகுதி இல்லை என்று விமர்சித்த டாக்டர் காமராஜ் தான் என நெப்போலியன் தெரிவித்துள்ளார்.