இவர்கள் தான் பிக்பாஸ் சீசன் 8-இன் போட்டியாளர்களா?
Aug 31, 2024, 07:05 IST
சீரியலை விட இந்த நிகழ்ச்சிக்கு தான் டிஆர்பி எகிறும். சண்டை, கலவரம் என அனைத்தும் இடம்பெறும் ரியாலிட்டி ஷோவான இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இதுவரை கிட்டத்தட்ட ஏழு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதாவது 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சினிமாவில் பல கமிட்மெண்டுகள் இருக்கும் காரணத்தால் நடிகர் கமல்ஹாசன் 8வது சீசனை தொகுத்து வழங்க முடியாது என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. பின்னர் விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகையினால் இந்த சீசனில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது குறித்து தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி நடிகை பூனம் பாஜ்வா, நடிகர் ரஞ்சித், நடிகரும் தொகுப்பாளருமான ஜெகன், TTF வாசன், மா கா பா, குரேஷி, ரியாஸ், ப்ரீத்தி முகுந்தன், அமலா சாஜி, ஷாலின் ஜோயா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இருப்பினும் சீசன் 8ல் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.