குலதெய்வ கோயிலுக்கு சென்ற அர்ஜுன் - தம்பிராமையா குடும்பம்..! 

 

ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன், ஒரு கட்டத்தில் அதனை நிறுத்தி தற்போது நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் என பல கேரக்டரில் நடித்து வருகின்றார். அர்ஜுன் நடிப்பில் இறுதியாக லியோ படம் வெளியானது. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார்.

அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு பிறகு தனது சம்மந்தி தம்பி ராமையாவின் குலதெய்வ கோயிலுக்கு சென்று அர்ஜுன் வழிபட்டார். அதில் திருமயம் அருகே உள்ள திருவட்டை அழகர்சாமி கோயிலில் அர்ஜுன் - தம்பிராமையாவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள். இதன் போது அர்ஜுன் தம்பி ராமையா இருவருக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

allowfullscreen