நடிகர் சிவகார்த்திகேயனை கௌரவித்த ஆர்மி அகாடமி!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தினை இயக்கினார் ராஜ்குமார் பெரியசாமி. 

கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது தற்போது வரையில் 350 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. 

சிவகார்த்திகேயன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆர்மி பயிற்சி அகாடமியில் சிவகார்த்திகேயன் பயிற்சி பெற்றதாகவும், துப்பாக்கி சுடுவதற்கும், துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும் என்பதற்கும் சரியான பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்திருந்ததாக அவரே பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆர்மி பயிற்சி அகாடமியை சேர்ந்த அதிகாரிகள் அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்து வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த சிவகார்த்திகேயனை கௌரவித்திருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.