வந்தவுடன் வன்மத்தை கக்கிய அர்ணவ்.. கொதித்தெழுந்த ஹவுஸ்மேட்ஸ்..!

 

பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வரும் நிலையில் தற்போது இரண்டாவதாக அர்ணவ் வந்துள்ளார்.

இதன் போது போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து இருக்க அர்ணவ் மீண்டும் தனது வன்மத்தை கொட்டியுள்ளார். இதனால் ஜாக்குலின், முத்துக்குமரன் ஆகியோர் அர்ணவுடன் வாக்குவாதம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ணவ்  சுமார் மூன்று வாரங்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்று இருந்தார். அவர் அன்ஷிதாவுடன் பிக்பாஸில் நுழைந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இறுதியாக அர்ணவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது போட்டியாளர்கள் மீதுள்ள வன்மத்தை கொட்டி தீர்த்து இருந்தார். அதற்கு விஜய் சேதுபதியும் தகுந்த பதிலடி கொடுத்திருந்தார்.

தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அர்ணவ், ஆரம்பத்திலேயே தனது வன்மத்தை கொட்டியுள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் அப்செட் ஆகியுள்ளனர். எனவே இவரை தொடர்ந்து வருபவர்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

இதன்போது போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதம் நீள சாமண்டி சாமண்டி லக்க லக்க.. என அர்ணவ் சொன்ன டயலாக்கும் தற்போது வைரல் ஆகி வருகின்றது

<a href=https://youtube.com/embed/P7XTBm4cyWU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/P7XTBm4cyWU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">