‘அருணாச்சலம் படம் சுந்தர்.சி வாழ்க்கையின் அடையாளம்‘ – நடிகை குஷ்பு பதிவு…!
தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் சுந்தர்.சி. இவர் ஆரம்பகாலத்தில் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் ‘முறை மாமன்‘ என்ற நகைச்சுவை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு இவரின் இயக்கத்தில் ‘ லண்டன், கிரி, வின்னர், அன்பே சிவம், உன்னைத் தேடி, தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு, ஆம்பள, காப்பி வித் காதல், அரண்மனை, அரண்மனை-2, அரண்மனை-3‘ உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின.
மேலும் இவர் ‘தலைநகரம்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ‘முரட்டு காளை, வாடா, தீ, ஐந்தாம் படை, சண்டை, ஆயுதம் செய்வோம், வீராப்பு, இருட்டு“ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திரையுலகின் பிரபல ஜோடியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் ‘அருணாச்சலம்‘ படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து ட்விட்டரில் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள குஷ்பு, “சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனை வைத்து இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவாகும். என் கணவர் 27 வயதாக இருக்கும்போதே ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருணாச்சலம் அவரது வாழ்க்கையில் ஒரு அடையாளமாக இருக்கிறது“ என அவர் பதிவிட்டுள்ளார்.