லிங்குசாமி இயக்கத்தில் அடுத்து நடிப்பது கார்த்தியா...? அல்லது ஆர்யாவா..??

லிங்குசாமி கார்த்தி மற்றும் ஆர்யாவிடம் கதைகள் கூறி ஓ.கே. செய்து வைத்திருப்பதாகவும், இரண்டுபேரில் யாருடைய படத்தை முதலில் துவங்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாகவும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 
 

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘பையா’. கார்த்தி, தமன்னா நடித்த இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்தன.

இதனுடைய இரண்டாவது பாகத்தை லிங்குசாமி உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த கதையில் கார்த்தி நடிக்காமல் ஆர்யா நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் கோலிவுட் சினிமாவில் பரபரப்பை கிளப்பியது.

ஆனால் இம்முறை பையா 2 படத்தில் ஆர்யா நடிக்காமல் கார்த்தியே ஹீரோவாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை. எனினும் கார்த்தியிடம் இயக்குநர் லிங்குசாமி வேறொரு கதையை சொல்லி ஓகே வாங்கி வைத்துள்ளார். அந்த படத்தை தான் அவரை கார்த்தையை வைத்து எடுக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயத்தில் முன்பு வெளியான தகவலின்படி பையா 2 படத்தில் ஆர்யா தன ஹீரோ, கார்த்தி படத்துக்கு முன்னதாக இப்படத்தை இயக்கும் பணிகளை லிங்குசாமி விரைவில் துவங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் கார்த்தி. அதற்கு பிறகு தான் லிங்குசாமி இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.