புஷ்பாவாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்..!! 

 

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் ‘புஷ்பா 2’. கடந்த 2021-ம் ஆண்டு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் புஷ்பா முதல் பாகம் மிக பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் ஸ்டைல் இணையத்தில் வீடியோவாகவும், ரீலிஸ்களாகவும் செம ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.

இப்படத்தில் வரும் ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் செம வைரலானது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆட, இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

முதல் பாகம் செம ஹிட் கொடுக்க, ரசிகர்களின் எதிர்பார்ப்பு புஷ்பா 2 படத்தின் பக்கம் திரும்பியது. தற்போது புஷ்பா 2 திரைப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது, டேவிட் வர்னர், ‘புஷ்பா -2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள அல்லு அர்ஜுன் புகைப்படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை பதிவிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். டேவிட் வார்னர் தனது இணையப் பக்கத்தில் அடிக்கடி இவ்வாறு பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.