பேரதிர்ச்சி..! அடித்தே கொல்லப்பட்ட பிரபல நடிகர் மற்றும் அவருடைய தந்தை..!

 

பங்களாதேஷில் நடைபெறும் வன்முறையில் நடிகர் சாந்தோ கான் மற்றும் அவரது தந்தை செலின் கானை  கும்பல் ஒன்று அடித்து கொன்றுள்ளது. இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

2019 இல் வெளியான 'பிரேம் சோர்'  அன்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சாந்தோ கான். பின்னர் 2021 இல் 'பியா ரே', 2023 இல் 'புபுஜான்' மற்றும் 2024 இல் 'ஆன்டோ நகர்' போன்ற படங்களில் நடித்தார். 

செலிம்கான் திரைப்பட தயாரிப்பாளராக காணப்படுவதோடு பல படங்களையும் தயாரித்துள்ளார். ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தையும் செலிம் கான் இயக்கியுள்ளார்.  

இந்த படத்தின் மூலமே செலின்கான் தனது மகன்  சாந்தோ  கானை  நடிகராக சினிமா திறமை துறையில் அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு பல படங்களில் அவர் நடித்து பிரபலமானார். இவ்வாறான நிலையில் தற்போது தந்தையும் மகனும் கொல்லப்பட்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.