சீரியல் நடிகையாகும் 'அயலி' புகழ் நடிகை.. ஹீரோ யாரு தெரியுமா..?

 

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிப்பதற்காக குறித்த சேனல்களுக்கு இடையே எப்போதும் போட்டி நிலவுகின்றது.

அதிலும் சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்தால் உடனே அந்த சீரியலுக்கு முடிவு கட்டி புதிதாக அடுத்த சீரியலை களம் இறக்குவதற்கான  பணிகளில்இடம்பெறும்.

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் மருமகள், மூன்று முடிச்சு ஆகிய சீரியல்கள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கின்றன. இதை தொடர்ந்து இன்னும் பல சீரியல்கள் அடுத்தடுத்து சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ளன.

இந்த நிலையில் சன் டிவியில் களமிறங்க உள்ள புதிய சீரியல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கனா காணும் காலங்கள் நாயகனாக நடித்த பரத் மற்றும் அயலி தொடரில்  நடித்த அபி நட்சத்ரா இருவரும் ஜோடியாக இணைந்து நடிக்க  உள்ள புதிய தொடர் தான் 'உன்னை சரணடைந்து'.

இந்த சீரியலை ஐ என் மூவி மேக்கர் தயாரிப்பதாக  தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே புன்னகை பூவே என்ற சீரியலை தயாரித்தமையும் குறிப்பிடத்தக்கது.