ஆட்டோ வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த பாலா மற்றும் லாரன்ஸ் மாஸ்டர்..!

 
சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பாலா  இவர் தொடர்ந்து மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பல ஊர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கிறார்.

சமீபத்தில் கூட ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பள்ளி ஒன்று உதவி இருந்த நிலையில் தற்போது கல்யாணமான ஒரு சில வருடங்களிலேயே கணவர் இழந்து மூன்று மகள்களுடன் எலக்ட்ரிக் ட்ரெயினில் சமோசா விற்பனை செய்து வரும் பெண்ணிற்கு மீண்டும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து ஆட்டோ வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பலரும் பாலாவுக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.