பரபரப்பான கட்டத்தில் ‘பாக்யலட்சுமி’ சீரியல் ! #ISupportBaakiyalakshmi

 

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீரியலில் ராதிகவுடன் வேறு திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்கியாவை பழிவாங்க நினைத்து  தனது வீட்டை விற்க போவதாக கூறியிருந்தார், அந்த சமயத்தில் எழில் ‘இந்த வீட்டை தாங்களே விலை கொடுத்து வாங்கிகொள்கிறோம்’ என சவால் விட்டார். அதற்காக ஒரு மாதம் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், எழில்லால் அந்த தொகையை ரெடி செய்ய இயலவில்லை.

இதனால் எங்கு குடும்பம் சிதறி விடுமோ என்ற பயத்தில் இருந்த எழில்லிடம் பாட்டி மற்றும் செழியன்,  தயாரிப்பார் மகளான வர்ஷினியை திருமணம் செய்ய கட்டாய படுத்துகின்றனர். வேறு வழியில்லாமல் எழில் இதற்கு சம்மதம் தெரிவிக்க நிச்சயதார்தம் மற்றும் திருமண ஏற்பாடுகள் படுஜோராக நடக்கிறது.எழில் போன் எடுக்காததால் திருமணம் நடக்கும் இடத்திற்கும் வரும் அமிர்தா, அதிர்ச்சி அடைகிறார். அமிர்தா வந்தததை பார்த்து ஈஸ்வரி அவரை திட்டி அனுப்புகிறார்.

இந்த விஷயம் எழிலுக்கு தெரிய வர, அமிர்தா பார்த்து நடந்ததை கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். தன்னுடைய மகன் காசுக்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதை பாக்யா அறிகிறார். தன்னை போன்று தனது மகனின் வாழ்க்கையும் பாழாகிவிடக் கூடாது என்று பாக்யா நினைக்கிறார். அதனால் எழிலுடன் கண்டிப்பாக அமிர்தா இணையவேண்டும் என்று நினைக்கும் பாக்யா, திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

<a href=https://youtube.com/embed/cmiiq7xg-cs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/cmiiq7xg-cs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">