பானுப்ரியாவின் சோகப்பக்கம் : இவர் வாழ்க்கையில் இவ்வளவு விஷயம் நடந்தா..?

 

90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த பானுப்பிரியா தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த சோக கதைகளை பற்றி மனம் திறக்கிறார் செய்யாறு பாலு.

பானுப்பிரியா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ ஆந்திர மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் பானுப்பிரியா. இவருக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள். பானுவின் உண்மையான பெயர் மங்கம்மா. அவருக்கு முதல் தமிழ் படம் பெரிதாக கிளிக் ஆகாத நிலையில், தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார். அதற்கு பலன் கிடைத்தது.    

நடிகை பானுப்பிரியா எப்படி படிப்பை விட்டார் என்பதை பற்றி பார்க்கலாம். அதாவது நடிகர் பாக்கியராஜ் தன்னுடைய படத்திற்காக பானுப்பிரியா பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அணுகி இருக்கிறார். அப்போது பானுப்பிரியா பள்ளி மாணவியாக இருந்தாலும் அவருடைய டான்ஸ் திறமையை பார்த்து பாக்கியராஜ் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.அதற்கான போட்டோ சூட்டுக்கு பிறகு பானுப்பிரியா அந்த படத்திற்கான கேரக்டரை விட ரொம்பவும் குழந்தை போல தெரிந்திருக்கிறார் அதனால் இந்த கேரக்டருக்கு சரியாக இருக்காது என்று பாக்கியராஜ் பானுப்பிரியாவை நீக்கிவிட்டாராம். ஆனால் அதற்குள் பானுப்பிரியா தான் பாக்கியராஜ் படத்தில் நடிக்கப் போவதாக பள்ளிக்கூடத்தில் முழுவதும் பெயர் சொல்லிவிட்டாராம். இதனால் பானுப்பிரியா திரைப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை தெரிந்ததும் அவருடைய நண்பர்கள் எல்லோரும் கேலி செய்திருக்கிறார்கள். அதனாலேயே பானுப்பிரியா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டாராம் அதற்குப் பிறகுதான் நீண்ட நாட்களாக பல முயற்சிகள் எடுத்து பானுப்ரியா வாழ்க்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கி விட்டார். அதன் பின்னர் நாட்கள் ஓட, அவருக்கு நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சினை வந்துவிட்டது. குறிப்பாக  ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் வசனங்களை சொல்லும் பொழுது, அவரால் முன்பு போல சரளமாக பேச முடியவில்லை. இதனை சரியாக புரிந்து கொண்ட அந்த படத்தின் இயக்குநர் கேமராவின் பின்னால் இருந்து வசனங்களை சொல்லச் சொல்ல, பானு அதனை பேசினார். 

இதனையடுத்து அவர் மொத்தமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்து இருக்கிறார். பானுப்பிரியாவுக்கு 1998-ல் திருமணம் நடந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய கணவர் இடையிலேயே இறந்து போகிறார். இதனையடுத்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. மீண்டும் நடிப்பதற்கு வருகிறார். அவருக்கு சென்னையில் மிகப்பெரிய வீடு இருந்தது. பர்சனல் பிரச்சினைகள் காரணமாக, அந்த வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.   

அவருக்கு ஏ.வி.எம் சரவணன் தன்னுடைய ஸ்டியோவில் உள்ள ஒரு அறையை கொடுத்து தங்க வைத்தார்.