இசைஞானி இளையராஜா ஆரம்பகாலத்தில் சந்தித்த சவால்கள் - பாரதிராஜா உருக்கமாக பகிர்வு

 

இசைஞானி இளையராஜா,அவரது ஆரம்பகாலத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி பிரபல இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் பேசியுள்ளார்.

.பேட்டியில், பாரதிராஜா இளையராஜாவுடன் ஆரம்பத்தில் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதையும், அவருடைய வளர்ச்சிப் பாதையில் வந்த தடைகள் பற்றியும் பகிர்ந்துள்ளார். "நான் முதன்முதலில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக அவருடைய ஊருக்கு சென்றபோது தான் அவருடன் நண்பராகி, இசைக்கச்சேரிகளுக்கு அவருடன் செல்வது வழக்கமாகிவிட்டது," என அவர் கூறினார்.

அப்போது சென்னை வந்தபோது, இளையராஜாவுக்கு தங்க இடத்தை ஏற்பாடு செய்து உதவியதாகவும், அவர் சிரமங்களை எதிர்கொண்ட காலத்தை நினைவுகூர்ந்தார். சென்னையில் தங்கியிருந்த இடங்களில் சாதி அடிப்படையிலான தடைகள், பிராமணர்கள் அதிகம் இருந்த பகுதி என்பதால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஆகியவை குறித்து உண்மையோடு பேசினார்.இளையராஜாவின் திறமையை அறிமுகப்படுத்த பலர் எதிர்க்கும்போது, அவர் பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவை அறிமுகப்படுத்தியதையும், சினிமாவில் சாதி அடிப்படையிலான அவதூறுகளை எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.


பாரதிராஜா கூறியதுபோல், அந்த காலத்தில் சிலர் இளையராஜாவின் திறமைக்கு தடையாக நிற்க, அவர் அதை தாண்டி முன்னேறினார் என்பதும், இன்று இவ் அளவுக்கு உயர்ந்து அவர் தமிழ் இசை உலகில் மகுடம் சூடிய பெருமையையும் உரக்க சொல்கிறார்.