#BIG NEWS : ரசிகர்கள் ஷாக்..! நில மோசடி வழக்கில் சிக்கிய மகேஷ்பாபு..!
நடிகர் மகேஷ்பாபு தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அவருக்கு அதிகாரபூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு ஒரு ரியல் எஸ்டேட் மோசடி தொடர்பானதாகும். மகேஷ்பாபு ஒரு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்ததாகவும், அதன் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படடதாகவும் புகார் எழுந்துள்ளதால், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து அதிகளவான பணத்தை திரட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் விளம்பரங்களுக்குத் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்தமையாலே மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
அந்த நிறுவனத்தின் விளம்பர புரொமோஷனில் ஈடுபட்டதற்காக மகேஷ்பாபுவிற்கு ரூ.3.4 கோடி தொகை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மகேஷ்பாபு தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.