#BIG NEWS : பிரஸ் மீட்டில் சரிந்து விழுந்து கார்த்தி பட இயக்குநர் காலமானார்..!
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியை வைத்து 'சகுனி' என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் சங்கர் தயாள். இந்த படத்தில் கார்த்தி உடன் சந்தனம், பிரகாஷ் ராஜ், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ரோஜா, நாசர், ராதிகா என்று மிகப் பெரிய நட்ச்சிர பட்டாளமே நடித்து இருந்தார். 2012ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தொடர்ந்து 2016ம் ஆண்டு விஷ்ணு விஷாலை வைத்து வீர தீர சூரன் என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும், சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் தான் சுமார் 8 ஆண்டுகள் கழித்து, முதன்மை பாத்திரமாக யோகி பாபு நடிக்கக் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கவிருந்தார்.
இந்தப் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (டிச. 19) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு இயக்குநர் சங்கர் தயாள் வந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. செய்தியாளர் சந்திப்பு தொடங்க கொஞ்ச நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிட்டனர். அவருக்கு வயது வெறும் 47. இயக்குநர் சங்கர் தயாளின் திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.