வளைக்காப்பு புகைப்படங்களை பகிர்ந்த பிக்பாஸ் நடிகை பூஜா !

 

பிரபல விளம்பர மாடலான பூஜா, எஸ்.எஸ்.மியூசிக்கில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே அறிமுகமானவர். இதையடுத்து காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ரா, லா, தொச்சாய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கைனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நடிகர் ஜான் கொக்கைன், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமானவர். அதன்பிறகு வீரம், கேஜிஎப், கப்ஜா, துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 

சமீபத்தில் நடிகை பூஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் தனது வளைக்காப்பு புகைப்படங்களை நடிகை பூஜா வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், முழு உலகிலும் எனக்குப் பிடித்த மனிதனுடன் ஒரு மனிதனை உருவாக்குவதை விட உற்வாக்குவதை விட உற்சாசமானது எதுவுமில்லை. எங்கள் வாழ்வின் புதிய கட்டத்தில் பெண்மை, காதல், நட்பு ஆகியவற்றை கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.