வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள பிக்பாஸ் வீடு..?
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்கள் "பாய்ஸ் vs கேர்ள்ஸ்" கருப்பொருளின் கீழ் பல்வேறு டாஸ்க்குகளில் ஈடுபடுவதால் கடுமையான போட்டி நிலவியுள்ளது. இந்த ப்ரோமோவில் அனைவரும் கடிதம் எழுதியுள்ளனர் அதனை தற்போது ஒவ்வொருத்தராக வா சித்துள்ளனர்.
இந்நிலையில் பவித்ரா, ஜக்குலினுக்கு யாரோ ஒருவர் எழுதிய கடிதத்தை வாசித்துள்ளார் அதில் "நாங்க உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொன்னால் அதை இன்னொருத்தவங்களுக்கு மாத்தி சொல்லுவதே உங்களின் கேரக்டர்"என எழுதியுள்ளது.அது ஒருபுறம் இருக்க இந்த BB வீட்டில் சந்தோசத்தை விட மன உளைச்சலே அதிகம் இதற்கு காரணம் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்த ரியா தான் காரணம் என எழுதியுள்ளது.