திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

 

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பிரதீப் ஆண்டனி நிச்சயம் அவர் கடைசி வரை இருந்திருந்தால் அவருக்கு தான் டைட்டில் பட்டம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அவரை சதி செய்து வெளியேற்ற வேண்டும் என்று மாயா பூர்ணிமா கேங் திட்டமிட்டதை அடுத்து கமல்ஹாசனை வைத்தே அவரை வெளியேற்றியது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தான் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரதீப் ஆண்டனி பிஸியாக திரை உலகில் இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக குறிப்பிட்டு மணப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

பிரதீபா ஆண்டனியை திருமணம் செய்யப்போகும் மணமகள் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.