அனல் பறக்கும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ..!
Dec 8, 2023, 06:35 IST
பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது.
அர்ச்சனா வினுஷா விஷயம் குறித்து கிளற திரும்பத் திரும்ப அதை பற்றியே பேசாதீங்க என நிக்சன் கடுப்பாகி நீ எல்லாம் ஒரு பொண்ணா என காரி துப்புகிறார். பிக் பாஸை விட்டு ஓடிப் போயிடு என எச்சரிக்கிறார்.
அர்ச்சனா மரியாதையா பேசு போடா என பதிலடி கொடுக்கிறார். இந்த வீடியோவால் இன்று பிக் பாஸ் வீட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.