எதிர்பார்க்கப்பட்டதுக்கு முன்னதாகவே துவங்கும் பிக்பாஸ் சீசன் 7..!!

நடிகர் கமல்ஹாசனுக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதால், பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் எதிர்பார்க்கப்பட்டதுக்கு முன்னதாகவே துவங்குகிறது. 
 

தமிழில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ளது.

இடையில் ஒரேயொரு சீசனை மட்டுந்தான் சிம்பு தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து கமல்ஹாசன் தான் நீண்ட ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் சில வாரங்களில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி முடிவடையவுள்ளது. 

அதனால் பலருடைய கவனமும் பிக்பாஸ் சீசன் 7 மீது திரும்பியுள்ளது. புதிய சீசன் எப்போது துவங்கும்? யாரெல்லாம் போட்டியாளராக இடம்பெறவுள்ளனர்? கமல்ஹாசன் தான் புதிய சீசனையும் தொகுத்து வழங்க உள்ளாரா? என்பன போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. 

இதற்கிடையில் பிக்பாஸ் சீசனுக்கான ஒளிபரப்பு திட்டமும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும்  அக்டோபர் மாதம் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி தற்போது ஆகஸ்டு மாதமே துவங்கப்படுகிறதாம். இது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.