'கோட்' படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஜாக்பாட்..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சமீபத்தில் அரசியலில் ஈடுபடுவதுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் "கோட்" படத்திலும் நடித்து வருகின்றார். இதில் முதல் முறையாக யுவன் மற்றும் விஜய் இணைகிறார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா, தற்போது விஜய் நடித்து வரும் கோட் படத்தில் பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அர்ச்சனாவுக்கு "கோட்" படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவல் பொய்யானது என்று பலர் கூறி வந்தாலும் அர்ச்சனா அவர்கள் தற்போது வைத்துள்ள பிஆர் சற்று சினிமா துறையினருக்கு நெருக்கமானவர் என்பதனாலும் ,ஜேம்ஸ் சசிந்தர் கூட நான் அர்ச்சனாவை பாட வைக்கப்போகிறேன் என்று அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறான நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பதினால் இதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.