வெளியான ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் ப்ரோமோ.. பிச்சைக்காரன் பீட்சா சாப்பிடக்கூடாதா?

 

நடிகர் கவின் நடித்து வரும் ப்ளடி பெக்கர் திரைப்படமானது நெல்சன் அவர்களின் உதவி இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் அவரது இயக்கத்தில் இன்னும் சில காலங்களில் வெளியாகவுள்ளது.

குறித்த இத் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களை பெரிதும் ஆர்வத்திற்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் படத்தில் பிக்பாஸ் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி,மாருதி பிரகாஷ்ராஜ்,சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் போன்ற பலர் சிறப்புக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் 2வது Sneak Peek வீடியோ வெளியானது குறித்த ப்ரோமோ காணொளியில் பிச்சைக்கார வேடத்தில் நடிக்கும் கவின் பீட்சா ஓடர் செய்து சாப்பிடுவது போன்று காணப்படுகின்றது.