கையில் ரத்த காயங்கள்.. படப்பிடிப்பில் சமந்தாவுக்கு என்னநடந்தது ? 

 

நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியிள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்டமாய் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் சாகுந்தலம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய் தேவர கொண்டாவின் குஷி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதனால் தன்னால் படுக்கையில் இருந்து கூட ஒரு சில நாட்கள் எழ முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு கடுயைமான வலியை அனுபவித்து வருவதாகவும் உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர். 

மயோசிடிஸ் நோய்யில் இருந்து நடிகை சமந்தா மெது மெதுவாக மீண்டு வருகிறார் என்றே கூறலாம். நீண்ட மாதங்களுக்கு பிறகு, சமந்தா  மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார். அதன்படி, அவர் தற்போது வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடர் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த வெப் தொடர் படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் சமந்தா நடித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவருடைய கையில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான புகைப்படத்தையும், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காயங்கள் ஏற்பட்டாலும், அதயெல்லாம் பெரிதாக எடுத்துகொள்ளத சமந்தா மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சற்று கண் கலங்கி உள்ளனர். மேலும் நெட்டிசன்கள், பலரும் அவருடைய அர்ப்பணிப்பை பாராட்டி வருகிறார்கள்.