ப்ளூ சட்டை மாறன் வாழை படத்திற்கு கொடுத்தது பாசிட்டிவ் அல்லது நெகடிவ் விமர்சனம்..?
மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் பற்றி தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவருடைய விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழில் வெளியாகும் அநேகமான படங்களுக்கு வழக்கமாகவே நெகட்டிவ் விமர்சனங்களை தான் கொடுத்து வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். இதனால் அந்த படங்கள் தோல்வி அடைவதாகவும் பிரபலங்கள் பலர் குற்றச்சாட்டை முன்வைத்ததோடு சண்டை கூட பிடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் வாழைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார், அதன்படி அவர் கூறுகையில், மாரி செல்வராஜின் இளம் வயது வாழ்க்கை வரலாறு என கூறியதோடு இந்த படத்தில் இள வயது நாயகனாக வரும் சிறுவனும் அவனது நண்பரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ரஜினிகாந்தின் ரசிகன் ஆன ஹீரோவும் கமல் ரசிகராக அவரது நண்பரும் செய்யும் சேட்டைகள் சிரிக்க வைத்துள்ளன. இறுதிக்காட்சி கண்கலங்க வைத்துள்ளது தரமான படத்தை தான் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார் மாரி.
இந்த படத்தில் குறை என்றால் அது பள்ளியில் டீச்சரை கதையின் நாயகனாக சிறுவன் விரும்புவதாக காட்டப்படும் காட்சிகள் தான் உறுத்தும் விஷயமாக உள்ளது. அதையும் மோசமாக காட்டவில்லை என்பது ஆறுதலை தந்தாலும் அதை இன்னும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம் என்று தனது பாசிட்டிவ் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.