ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் : விடுதலை 2 - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு..!
அண்மையில், விடுதலை 2 திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரைலர் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் வெற்றிமாறனின் கதையின் ஆழத்தை பற்றி பாராட்டுகள் குவிந்தன. ட்ரைலரில் இடம்பெற்ற, "தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்" என்ற வசனம் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்த வசனத்தை குறிப்பிட்டு, இது எம்.ஜி.ஆரை குறிவைத்து வைத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது"வெற்றிமாறன் தனது திரைப்படங்களில் குறிப்பிட்ட அரசியல் கருத்துகளை முன்னிலைப்படுத்துகிறார்,எம்.ஜி.ஆர் தனது சொத்துகளை மக்களுக்காக எழுதி வைத்தவர்; அவர் சம்பாதித்தது மக்களின் பணம் அல்ல"
விஜய் சேதுபதி குறித்தும், எம்.ஜி.ஆரை மரியாதையற்ற முறையில் அணுகுவதாகவும் வசனத்தை அவர் விமர்சித்துள்ளார். இதற்கு சமூக ஊடகங்களில் வெவ்வேறு தரப்பினரிடையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
மற்றும் "சார்புத்தன்மைக்கு சோரம் போயிருந்தாலும்.. விடுதலை 2 வெற்றிபெற வெற்றிமாறருக்கு வாழ்த்துகள்."என குறிப்பிட்டுள்ளார்.விடுதலை 2 வெறும் ஒரு திரைப்படம் மட்டுமல்லாமல், சமூக, அரசியல் விவாதங்களுக்கு களமாக மாறியுள்ள நிலையில், இதன் வெளியீடு தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.