கங்குவா படக்குழுவினருக்கு குடைச்சல் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்..! 

 

கங்குவா படத்தில் முதல் நாள் காட்சியை பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் மூன்று பாகுபலி படத்தை பார்த்தது போல் உள்ளது. அவதார் படத்தை பார்த்தது போல் உள்ளது என்று மிகப்பெரிய அளவுக்கு தமது விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். ஆனாலும் ஒரு சிலர் இந்த படத்தில் பெரிதாக சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. சூர்யாவின் அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய தொடங்கின. மேலும் இதில் எதற்கு கத்துறாங்கன்னு தெரியல, சாங் சிஸ்டம் சரியில்ல, பாட்டுகள் கூட பெரிதாக ஈர்க்கவில்லை ஆனால் இதில் திஷா பதாணியின் கவர்ச்சி தான் எடுப்பாக இருக்கின்றது என்று படம் பார்த்தோர் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

எனினும் கங்குவா திரைப்படம் வெளியாகி 58 கோடிகளை முதல் நாளில் வசூலித்திருந்தது. 

இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தை வழக்கம் போல கலாய்த்து உள்ளார். அதன்படி 58 வடைக்கு ரசீது எங்க? சீக்கிரம் சொல்லப்பா எல்லாருக்கும் ஏகப்பட்ட ஜோலி கிடக்கு.. என தயாரிப்பாளரை கிண்டல் செய்துள்ளார்.

அதாவது கங்குவா படத்தின் வசூலை ஒவ்வொரு தடவையும் கலெக்ஷன் வெளியாகும் போது அதன் உண்மை ஜிஎஸ்டி   ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று சொல்லியிருந்தார். தற்போது அதற்கான ரசீது எங்கே என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து உள்ளார்.