பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடிக்கு பெண் குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!
Sep 9, 2024, 06:05 IST
பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் தம்பதி தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் . இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில் காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டனர். நடிகை தீபிகா படுகோன் பிப்ரவரியில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கர்ப்பமாக இருந்த நிலையிலும், கல்கி படத்தில் நடித்து கொடுத்தார்.
இந்நிலையில், கர்ப்பமாக இருந்த நடிகை தீபிகா படுகோனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.