பாம்பே ஜெயஸ்ரீக்கு நினைவு திரும்பியது: குடும்பத்தினர் மகிழ்ச்சி..!!

மூளையில் ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு நினைவு திரும்பியது என்று அவருடைய குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

பிரபல கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசைப் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் இசைப் பயணம் நடத்தி வருகிறார். அங்குள்ள லிவர்பூல் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தனது இசைக்குழுவுடன் தங்கி உள்ளார். கடந்த 23ம் தேதி இரவு அவருக்கு கடுமையான கழுத்து வலி ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து உறங்கச் சென்ற அவர், அடுத்தநாள் காலை உணவு சாப்பிட டைனிங் ஹாலுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் தங்கிருந்த அறைக்கு சென்று பார்த்த போது, பாம்பே ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.  உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதில், ”பாம்பே ஜெயஸ்ரீக்கு  இங்கிலாந்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது உண்மை தான். அதற்குரிய சிகிச்சைகள் அனைத்தும் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலை சீரடைந்துள்ளது மற்றும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். மேலும் 2 நாட்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்த சூழலில் பாம்பே ஜெயஸ்ரீ குடும்பத்தினரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.