வேட்டையனுக்காக வாய்ஸ் கொடுத்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா..!

 

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி. அதியனாக நடித்த வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டையன் படம் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் வேட்டையனுக்காக வாய்ஸ் கொடுத்திருக்கிறார் தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா.

வேட்டையன் படத்தின் அறிமுக காட்சியில் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் வந்து இறங்குவார் ரஜினிகாந்த். அந்த காட்சி வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வேட்டையன் படம் பார்க்குமாறு மஹிந்திரா ஸ்கார்பியோ நிறுவனம் ட்வீட் செய்தது. மேலும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பற்றியும் தெரிவித்தது. இந்நிலையில் அந்த வீடியோவை எடுத்து ஆனந்த் மஹிந்திராவும் ட்வீட் செய்துள்ளார்.

வேட்டையன் வீடியோவை வெளியிட்டு ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ஒரு கார் லெஜண்டரி ஆக வேண்டும் என்றால் அது லெஜண்டால் நம்பப்பட வேண்டும். அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வந்த வேட்டையன் என தெரிவித்துள்ளார். ஆனந்த் மஹிந்திரா சார் சொல்லிவிட்டார், இனி வேட்டையன் படத்திற்கான டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.