கேப்டன் ரசிகர்கள் அதிருப்தி..! ’கோட்’ படத்தில் விஜயகாந்த் காட்சிகள் இவ்வளவுதானா?

 
செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ’கோட்’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த காட்சிகளை பிரேமலதா பார்த்து ஓகே சொல்லிவிட்டதாகவும் குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்கள் விஜயகாந்த் இந்த படத்தில் தோன்றுவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ’கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் காட்சிகள் வெறும் இரண்டரை நிமிடங்கள் தான் என்று கூறப்படுவது கேப்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு கேப்டனை திரையில் பார்க்க போகிறோம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் வெறும் இரண்டரை நிமிடங்கள் காட்சிகள் தானா என்பது ரசிகர்களின் குறையாக உள்ளது. இருப்பினும் அந்த இரண்டரை நிமிட காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்றும் படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காட்சிகள் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த் தவிர இந்த படத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா, வெங்கட் பிரபு மற்றும் சில சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பதும் அவர்களது காட்சியும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.