நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு..!

 

தமிழ்,தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்களை நடித்தவர் தான் நடிகை கஸ்தூரி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 யிலும் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது பிராமணர்களிற்காக குரல் கொடுத்து வரும் இவர் "300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின்  அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள்" என தெலுங்கர்களை இழிவுபடுத்தி பேசியமையினால் அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுகின்றார் என 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்றும் இவரது சர்சைக்குரிய பேச்சினால் 2 கோடி தெலுங்கு மக்கள் மனமுடைந்ததாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை எழும்பூர் போலீஸார் நடிகை கஸ்தூரி மீது கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு, இழிவுப்படுத்துவோர் மீது நடிவடிக்கை எடுக்க தனிச் சட்டம் கொண்டு வரவேன்உன் என்ற கோரிக்கையுடன் நவம்பர் 4-ம் தேதி ஆர்பாட்டம் நடைபெற்றது.