விஷ்ணு மற்றும் மனைவி அஸ்மிதா மீது வழக்குப் பதிவு…!
இன்ஸ்டா மூலம் பிரபலமானவர் மேக்கப் ஆர்டிஸ்ட் அஸ்மிதா. இவர் சொந்தமாக மேக்கப் அகாடமி வைத்துள்ளார். பிரபலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று திருமண மற்றும் விசேஷங்களுக்கு மேக்கப் செய்து வருகிறார். இவருடைய கணவர் விஷ்ணுகுமா.ர் இவரும் அரசியல் குறித்து வீடியோக்கள் போடுவது, டான்ஸ் ஆடுவது என வீடியோக்களை போடுகிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய நண்பனின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விதமாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாக அவரை நேரில் பார்க்க சென்றபோது ஐந்து பேர் விஷ்ணுவை தாக்கியதாகவும் வீடியோ ஒன்று பரவியது.
இதனை அடுத்து விஷ்ணு தன்னை பணம் கேட்டு விரட்டி அடித்து துன்புறுத்துவதாக அஸ்மிதா சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். இந்த நிலையில் விஷ்ணு மற்றும் அவருடைய மனைவி அஸ்மிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள.து குடும்பமாக சேர்ந்து ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி செய்ததாக சென்னை மத்திய பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.