இதுதான் சின்மயின் குழந்தைகளா..!! கியூட்டா இருக்காங்களே..!!

திரைப்பட பாடகியும் முன்னணி டப்பிங் கலைஞருமான சின்மயி ஸ்ரீபாதா முதன்முறையாக தனது இரட்டைக் குழந்தைகளின் முகங்களை வெளியுலகுக்கு காட்டியுள்ளார்.
 

தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தற்போது பிரபல பின்னணிப் பாடகியாக இருக்கும் இவர், முன்னணி டப்பிங் கலைஞராகவும் உள்ளார். பத்மப்ரியா, த்ரிஷா, சமீரா ரெட்டி, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ படத்தில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் தேசியளவில் பிரபலமானது. மேலும் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷாவுக்கு அவர் தான் பின்னணிப் பேசி இருந்தார். அதே படம் தெலுங்கில் தயாரான போது, கதாநாயகியாக நடித்த சமந்தாவுக்கும் அவர் தான் டப்பிங் பேசினார்.

இவருக்கும், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகருமான ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு திரிபத் மற்றும் ஷ்ராவாஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

குழந்தைகள் செய்யும் குறும்புத் தனம், அவர்களோடு விளையாடு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எப்போதும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார் சின்மயி. தற்போது முதன்முறையாக தனது குழந்தைகளின் முகத்தை வெளியுலகுக்கு காட்டியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் அனைத்தும் இன்ஸ்டாவில் பலரால் பார்க்கப்பட்டு வருகின்றன.