நடிகர் சிரஞ்சீவிக்கு புற்றுநோய் பாதிப்பு..? சிகிச்சை குறித்து ட்விட்டரில் விளக்கம்..!!

தனக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் இருந்ததாகவும், அதை மருத்துவர்கள் நீக்கிவிட்டதாக நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தெலுங்கு சினிமாவில் ரஜினிகாந்துக்கு இணையான புகழைக் கொண்ட நடிகர் சிரஞ்சீவி. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு.

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் நடிகர்கள் தான். இதனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமான சினிமா குடும்பமாக உள்ளனர். நடிப்பது மட்டுமின்றி படத் தயாரிப்பு மற்றும் உள்ளூர் அரசியல் செயல்பாடு உள்ளிட்டவறிலும் சிரஞ்சீவி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்து, சிகிச்சை பெற்று குணமடைந்ததாக செய்திகள் பரவின. ஊடகங்கள், சமூகவலைதளங்கள், சினிமா என பல்வேறு முறைகளில் இந்த தகவல் வைரலானது. மேலும் சிரஞ்சீவிக்கு பல்வேறு தனிப்பட்ட அழைப்புகள் வந்துவிட்டன. 

அதற்குரிய மருத்துவ சிகிச்சை எடுத்து நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒருவேளை நான் பரிசோதிக்கவில்லை என்றால், எனக்கு புற்றுநோய் வந்திருக்கும். அதனால் அவ்வப்போது உடலை பரிசோதித்துக் கொண்டால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என சிரஞ்சீவி விளக்கம் கொடுத்துள்ளார்.