கொரோனா வறுமையால் விருதுகளை விற்ற நடிகைக்கு சிரஞ்சீவி நிதியுதவி..!

 

கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘சேலஞ்ச்’ என்கிற படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் பாவலா சியாமளா. தொடர்ந்து பல்வேறு தெலுங்குப் படங்களில் நடித்து வந்த அவர் சினிமாவை நம்பி மட்டுமே உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட சியாமளா, தனக்கு கிடைத்த விருதுகளை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தினசரி செலவுகளை கவனித்து வந்தார்.

இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. நடிகர் சிரஞ்சீவிக்கு இந்த செய்தி கிடைத்தவுடன், நடிகை பாவலா ஷியாமளாவுக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சங்கம் மூலம் அவருக்கு மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.