நடிகை கீர்த்தி சுரேஷின் கழுத்தை பிடித்து நெரிக்கும் சிரஞ்சீவி..!! என்ன ஆச்சு..??
சிரஞ்சீவி, தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென கீர்த்தி சுரேஷ் மீது பாய்ந்து சிரஞ்சீவி கழுத்தைப் பிடித்து நெரிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழில் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம். அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.
தற்போது இந்த படம் தெலுங்கில் 'போலோ சங்கர்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சிரஞ்சீவி கதாநாயகனாகவும், கதாநாயகியாக தமன்னாவும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவகியுள்ளன. இதற்கிடையில் படத்துக்கான ப்ரோமோஷன் பாடல் காட்சிகள் படமாக்கப்படுவதற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது.
இதில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மூவரும் சிரித்துப் பேசி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மற்று ஆந்திர ரசிகர்களிடையே போலோ சங்கர் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.