திடீரென வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சீயான் விக்ரம்..! 

 

கடந்த வாரம் ரிலீஸ் ஆன விக்ரமின் தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனால் ரசிகர்களின் வருகை மட்டும் குறைவதாக இல்லை, வசூலில் கொடிகட்டி பறக்கிறது தங்கலான்.

இந்நிலையில் இன்று தனது ரசிகரின் மகன் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடிய போது திடீரென காணொளி மூலமாக தன் ரசிகரின் மகன் ஜஸ்வந்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அனைவரையும் மகிழ்ச்சி மழையில் நனைய வைத்தார் நடிகர் சீயான் விக்ரம்.