கிளாஸ்... மாஸ்..? தலைவரின் தரமான லுக்கை வெளியிட்ட தலைவர் 170 குழு ..!

 

லைகா தயாரிக்க ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் ரஜினி இடம்பெற்றுள்ளார்.